வீணாய்ப் போகும் தண்ணீர் கண்டுகொள்ளாத மாநகராட்சி..!! சரி செய்ய மக்கள் கோரிக்கை..!!
கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் ரோடு ஈச்சனாரி செல்லும் வழியில் அமைந்துள்ள, ஆர்வி நிறுவனம் அருகில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் ஓடும் நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதுபெரும் வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.
கோவை மாவட்டத்தில் போத்தனூர் பகுதியில் தண்ணீர் பத்து நாளைக்கு ஒருமுறை வந்து கொண்டிருக்கும். இந்த நிலையில் குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவும் இந்த காலகட்டத்தில் வீணாய்ப் போகும் இந்த தண்ணீரை நிறுத்தும் வகையில் உடனடியாக அந்த குழாயை சரி செய்து தர வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திக்காக,-எல் குமார். ஈசா.
Comments