செங்கல் சூளைகளுக்கு சீல் !! பொதுமக்கள் அவதி!!

     -MMH
     கோவை மாவட்டம் கணுவாய், சின்னதடகம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளை  சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் தடை விதித்தது.

இதனை அடுத்து  மாவட்ட நிர்வாகம் உரிய அனுமதி இன்றி செயல்பட்டு வந்த செங்கல் சூலைகளுக்கு அதிரடியாக சீல் வைத்தது. இதன் காரணமாக கோவையில் செங்கல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால்  கட்டிடம் கட்டுவோர் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

மேலும் இதை சார்ந்த தொழில் செய்வோர் வேலையின்றி வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனால் பழனி, உடுமலை, தாராபுரம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று செங்கல் வாங்கி வருகின்றனர். செங்கல் உற்பத்தி குறைந்ததால் கடந்த மாதம் 8 ரூபாய்க்கு விற்ற செங்கல் இப்பொழுது 12 ரூபாய் கடந்து விற்கப்படுகிறது. மேலும் போக்குவரத்து செலவு இருப்பதால் பொது மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு தலையிட்டு விரைவில் தீர்வு காண வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. 

நாளைய வரலாறு செய்திக்காக,

 -கண்ணன்,துடியலூர்.

Comments