சமூக சேவையில் இறங்கிய பொதுமக்கள் குவியும் பாராட்டு..!!

  -MMH

இன்று கோவை சேரன் மாநகர் பகுதியில் கொரோனா நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு கஷாயமும் மக்களுக்கு அங்குள்ள இளைஞர்களும் அதே பகுதியைச் சேர்ந்த கட்சித் தலைவர்களுடன்  இணைந்து இந்த செயல கடந்த இரண்டு நாட்களாக செய்து வருகின்றனர்.

இதையறிந்த அந்த பகுதி மக்கள் தானாக அவர்கள் முன்வந்து நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீருக்கு தேவையான பொருட்களை தந்து உதவுகின்றன. தேவைப்படுவோர் மேலும் முதியவர்களுக்கு இவர்களே நேரில் சென்று கபசுரக் குடிநீர் கொடுத்து வருகின்றனர். தற்போது அந்த பகுதியில் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

மேலும் இது போன்ற காரியங்கள் அனைத்து பகுதிகளிலும் இளைஞர்கள் அந்தப் பகுதி மக்களும் இணைந்து செயல்படுவது பாராட்டுக்குரியது. தன்னார்வலர்கள் இதுபோன்ற விஷயத்தை முன்னெடுத்து நடத்தினால் தற்போதைய இந்தக்  சூழலிலிருந்து மீண்டு வருவதற்கு ஒரு சிறிய முயற்சியாக இருக்கும். 

தற்போது அதிகரித்துள்ள இந்த கொரோனாவை இதுபோன்ற சில தற்காப்பு வலி முறைகள் மூலமாகத்தான் நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

-பாஷா, ஈஷா.

Comments