வயிற்று வலியால் துடித்த இளைஞருக்கு உடனடியாக, உதவிய போலீசாருக்கு குவியும் பாராட்டு..!!
கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகத்தில் பொதுமுடக்கம் அமலில் உள்ள இந்நிலையில், மதுக்கரை காவல் நிலையம் அருகே ஒரு இளைஞர் வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அந்த இளைஞரின் மனைவியும் குழந்தையும் அருகில் இருந்தார்கள்.
தந்தை வயிற்று வலியினால் துடிப்பதை கண்ட குழந்தைக்கு அதிர்ச்சியில் வலிப்பு ஏற்பட்டது குழந்தை ஒருபுறம் கணவன் மருபுறம் என்ற நிலையில் இருந்த அந்தப் பெண்மணிக்கு அருகில் இருந்தவர்கள் உதவிய நிலையில், குழந்தை சரியானது. கோரோனா காலமாக இருப்பதால் அங்கிருந்த மக்கள் ஒரு வித பீதியுடனும், அச்சத்துடனும், அவரை சுற்றி நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதைக் கண்ட காவலர் ஒருவர் உடனடியாக களத்தில் குதித்தார். மருத்துவமனை செல்வதற்காக 108 வாகனத்திற்கு போன் செய்யப்பட்டது 108 வாகனம் வர சற்று காலதாமதம் ஆனதால் பிறகு காவல்துறை உதவியுடன். வயிற்று வலியால் துடித்த அந்த இளைஞரை பிறகுஅங்கு வந்த 108 வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் காவல் துறையினரின் பங்களிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது என்று மக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஷாஜகான், ஈசா.
Comments