சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரம் மாற்றம்!!
சென்னையில் காலை 5.30 மணிமுதல் இரவு 9 மணிவரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னதாக, காலை 5.30 மணியிலிருந்து இரவு 11 மணி வரை இயக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை ஊரடங்கு காரணமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள இடங்களில் 5 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V.ருக்மாங்கதன், சென்னை.
Comments