ஞாயிறு முழு ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் இயங்காது! - விதிகளை பின்பற்றாவிடில் நடவடிக்கை!! - தமிழக அரசு எச்சரிக்கை!!
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, +2 பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் 20ஆம் தேதி முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேநீர் , பலசரக்கு , உணவகம் , வணிக வளாகங்கள் , ஜவுளி மற்றம் நகைக்கடைகள் இரவு 9 மணி வரை செயல்படும் . சுற்றுலாத் தளங்களுக்கு செல்ல அனுமதி இல்லை . உள்ளூர் , வெளியூர் பயணிகள் என யாருக்கும் அனுமதி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது .
திருவிழா , குடமுழுக்கு நடத்தக்கூடாது . குடமுழுக்கு நடத்த ஏற்கனவே அனுமதி பெற்றவர்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம் . இ - காமர்ஸ் நிறுவனங்களுக்கு ஞாயிறுக்கிழமைகளில் அனுமதி இல்லை .
திரையரங்குகள் ஏற்கனவே உள்ளது போல் 50% பார்வையாளர்களுடன் தொடர்ந்து செயல்படலாம் . விதிகளை பின்பற்றாவிடில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது .
ஞாயிறு அன்று பால் , பெட்ரோல் , டீசல் , காய்கறி கடை வழக்கம் போல் செயல்படும் . உணவகங்களில் பார்சல் உணவு மட்டும் வழங்கப்படும் . அதே நேரத்தில் ஞாயிறு அன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது .
-சுரேந்தர்.
Comments