நாளை அதிகாலை அதிசார குரு பெயர்ச்சி!!
பொதுவாக கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி யாவது வழக்கம்.
உதாரணமாக சூரியன் ஒரு ராசியில் ஒரு மாத இடைவெளியில் மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆவார்.
அதேபோல் சந்திரன் இரண்டேகால் நாள்களுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆவார்.
செவ்வாய் கிரகம் ஒன்றரை மாதத்திற்கு ஒருமுறையும் புதன் மற்றும் சுக்கிரன் மாதத்திற்கு ஒரு முறையும் இடப்பெயர்ச்சி யாவது வழக்கம் .
குரு, சனி, ராகு -கேது ஆகியவை ஆண்டு கிரகங்கள் என்று பெயர் பெற்றவை .
குருபகவான் ஆண்டுக்கு ஒரு முறையும் சனிபகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ராகு-கேது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறையும் இடப்பெயர்ச்சி யாவது வழக்கம்.
விதிவிலக்கு:
விதிவிலக்காக சில கிரகங்கள் மற்ற கிரகங்களின் ஈர்ப்பால் வேகமாக நகர்வதன் மூலம் சீக்கிரமே இடப்பெயர்ச்சி ஆகின்றது.
இதுபோன்ற இடப்பெயர்ச்சி அதிசார இடப்பெயர்ச்சி என்று ஆன்மிக பெரியோர்கள் மற்றும் ஜோதிடர்கள் அழைக்கிறார்கள் .
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்த குரு பகவான் தன் காலத்திற்கு முன்பு நாளை அதிகாலையில் கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் .இது அதிசய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. கும்பராசியில் ஆறு மாத காலம் அதாவது 15. 9 .2021 வரை சஞ்சரிக்கிறார்.
இந்த காலகட்டத்தில் அவர் கும்ப ராசியில் அமர்ந்து 5, 7 ,9-ஆம் பார்வையாக அமர்ந்து மிதுனம், சிம்மம் ,துலாம் ஆகிய ராசிகளை பார்க்கிறார் .
இந்த அதிசார நிகழ்வின் பொழுது சிரம தசையில் இருந்தவர்களுக்கு சுக திசையும் சுக திசையில் இருந்தவர்களுக்கு சிரமமான திசையையும் அருள்கிறார்.
ஒவ்வொரு ராசியினரும் அவரவர் ராசியின் பலனை அறிந்து அதற்கேற்ற பரிகாரங்களை செய்து குருவின் அருளைப் பெற்று வாழ வேண்டும்.
-V.ராஜசேகரன்,தஞ்சாவூர்.
Comments