பாரம்பரிய நெல்.!! யானை பலம் தரும் கூம்பாளை அரிசி!!!
சிங்கினிகார் அரிசி தனக்குள் ஏகப்பட்ட நோய் எதிர்ப்புச் சக்தியை கொண்டுள்ளது. இந்த நெல்லை சாகுபடி செய்யும்போது அறுவடைக்கு பிறகு கிடைக்கும் வைக்கோலின் பெருமளவு வீணாகி மண்ணில் மக்கி போய்விடும்.இதன் காரணமாக மண்ணின் சத்து அதிகரிக்கின்றது. பின்னர் வளரும் போது மண்ணில் உள்ள இந்த சத்தையே தன் உணவாக எடுத்து செழித்து வளருவது தான் சிங்கினிகார் அரிசி. மண்ணில் இயற்கையாகவே மக்கும் பொருட்களால் உண்டாகும் நுண்ணுயிர்களை தனது சத்தாக எடுத்துக் கொண்டு எந்த வித செலவும் இல்லாமல் சாகுபடி செய்ய வல்லது சிங்கினிகார். எனவே இது செலவில்லா இரகத்தின் கீழ் வகைப்படுத்தப்படுகிறது.
உணவு, பலகார வகைகள் என அனைத்திற்கும் ஏற்ற சிங்கினிகார் அரிசியில் நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்து காணப்படுகிறது. இதனை தொடர்ந்து உண்டு வாழ்பவர்கள் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளோடு வாழலாம். சிவப்பு பொரி தயாரிக்க சிங்கினிகார் அரிசி பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. நோய்வாய்ப்பட்டு இருப்பவர்களுக்கு சிங்கினிகார் அரிசி கொண்டு கஞ்சி வைத்து தர விரைவில் குணமடைவார்கள். அதோடு உடல் வலிமையும் கூடும்.
இரண்டாவதாக நாம் பார்க்க இருக்கும் நெல் இரகம் மணல் மற்றும் மணல் சார்ந்த பகுதியில் சாகுபடி செய்ய ஏற்ற கூம்பாளை:
கூம்பாளை அரிசியை விளைவிக்கும் போது எந்த ஒரு இரசாயனங்களையும் பயன்படுத்தக் கூடாது. தொழு உரம் பயன்படுத்தும் போதும் கவனமாக இருக்க வேண்டும். தென்னம்பாளை பூத்து இருப்பதை பார்க்க எவ்வளவு அழகாக இருக்குமோ, அதே போல தான் அறுவடைக்கு தயாராக இருக்கும் கூம்பாளை நெல்லும் பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கும். இதன் காரணமாக தான் இதற்கு கூம்பாளை என்ற பெயரே வந்தது. நூற்றி இருபது நாள் வயதுடைய கூம்பாளை சிவப்பு நிற அரிசியாகும்.
இது நேரடி விதைப்பு செய்ய தகுந்தது. ஐந்து அடி உயரம் வரை வளரக்கூடியது. ஒரு மாதம் வரை வறட்சியை தாங்கி வாழும் தன்மை கொண்டது. ஒரு ஏக்கரில் இருபது மூட்டை வரை சாகுபடி செய்யலாம்.
அனைத்து பாரம்பரிய நெல் இரகங்களுக்கும் ஒரு சிறப்பு மருத்துவ குணம் இருக்கும். அந்த வகையில் கூம்பாளை அரிசி நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்தது. கூம்பாளை நெல்லை
உரலில் போட்டு அரைத்து ஒரு காட்டன் துணியில் போட்டு பிழிந்து பால் எடுத்து, அந்த பாலோடு தேன் கலந்து காலையில் சாப்பிட்டு வர உடல் பலம் பெறும். அதோடு கர்ப்பிணி பெண்கள் கூம்பாளை அரிசி சோறு தொடர்ந்து சாப்பிட்டு வர பிரசவ காலத்தில் வலி குறையும்.
- கிரி,ஈஷா.
Comments