பேருந்துகளை பராமரிக்க போதுமான உதிரி பாகங்களை வழங்க அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

    -MMH

     கோவை: பேருந்துகளை பராமரிக்க போதுமான உதிரி பாகங்களை வழங்காமல் பேருந்து பிரேக் டவுன் ஆகும்போது தொழிலாளர்களை தண்டிக்கும் போக்குவரத்து கழக நிர்வாகத்தை கண்டித்து அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் கோவையில் செவ்வாயன்று அனைத்து பணிமனைகள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வார ஓய்வை பறிக்காதே, போக்குவரத்து கழக விடுப்பு விதிகளை மாற்றாதே, சம்பள பறிப்பு செய்யாதே, தொழிலாளர்துறை அறிவுரையை மீறாதே, பணிக்கு வந்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாதிலம் முழுவதும் கண்டன இயக்கங்களை நடத்த அரசு போக்குவரத்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறைகூவல் விடுத்திருந்தது. இதனையொட்டி கோவையில் அனைத்து போக்குவரத்து பணிமனை முன்பு  தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை சுங்கம் பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எல்பிஎப் கனேசன் தலைமை தாங்கினார். இதில் சிஐடியு சங்கத்தின் நிர்வாகிகள்  லட்சுமண நாராயண், பாலாஜி, சந்திரன், ஏஐடியூசிவில்  சண்முகம், ஓய்வூதியர் சங்கம் அருணகிரிநாதன், ரசீத், ஐஎன்டியுசி மதியழகன் மற்றும் எம்எல்எப், எச்எம்எஸ் உள்ளிட்ட அனைத்து சங்கஙகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று போக்குவரத்து கழக நிர்வாகம் மற்றும் தமிழக அரசை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

- சீனி,போத்தனூர்.

Comments