பத்திரிகையாளர் பிரக்யா மிஸ்ரா கொலை என பரவும் செய்தியின் உண்மை என்ன??!!

     -MMH 

     கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஹரித்வார் கும்பமேளாவில் கொரோனா வைரஸ் பரவும் செய்திகளை வெளிப்படையாக பேசியதால் பிரக்யா மிஸ்ரா பகல் நேரத்தில் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி பரவி வருகிறது.

அனால் இந்த செய்தி உண்மையானது அல்ல பொய்யானது. சமூக வலை தளங்களில் பகிர்ந்து வரும் வீடியோவில் உள்ள புகைப்படமும் சம்பவமும் வேறுவேறு ஆகும்.

நடுரோட்டில் கொலை செய்யப்பட்டு கிடக்கும் பெண் நீலு மெத்தா(26) ஆவார். அவர் டெல்லியில் உள்ள சபர்ஜங் மருத்துவமனையில் வேலைபார்த்தவர்.

கடந்த ஏப்ரில் 10 ஆம் தேதி அன்று டெல்லியில் உள்ள ரோகிணி மார்க்கெட்டில் அவரது கணவரால் (ஹாரிஷ் மெத்தா) அவர்  கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

அனால் சமூக வலைத்தளங்களில் பலரும் அது பிரபல இணையதள செய்தியாளர் பிரக்யா மிஸ்ரா என்று பரப்பி வருகின்றார்கள்.

இது போன்ற உண்மைக்கு புறமான செய்திகளை பரப்புவதற்கு முன் உண்மை தகவலா என்பதை ஆராய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

-ஒற்றன்.

Comments