சமுதாய கூடத்தை திறக்கக்கோரி மக்கள் கோரிக்கை!!

   -MMH

கோவை மாவட்டம்:     வால்பாறை பகுதியில் உள்ள ரோட்டிக்கடை அருகாமையில் உள்ள வால்பாறை நகராட்சி சமுதாயக்கூடம் வெகுநாட்களாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதை பலமுறை மக்கள் கோரிக்கை வைத்தும் வால்பாறை நகராட்சி அதிகாரிகளிடம் கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆகையால் இப்பகுதியிலுள்ள சமுதாய கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்களும் மக்கள் முன்னேற்ற இயக்கமும் பலமுறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.


இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆகையால் இந்த சமுதாய கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார் .

நாளை வரலாறு செய்திக்காக,

-திவ்யகுமார், ஈசா.

Comments