தனக்கு பரிசு தொகையாக வழங்கிய பணத்தை குழந்தையின் படிப்பு செலவிற்கு வழங்கிய ஷெல்கே.!!
மும்பையிலுள்ள வாங்கனி என்ற ரயில் நிலையத்தில் வேகமான ரயிலின் பாதையில் இருந்து மீட்கப்பட்ட ஆறு வயது குழந்தையின் குடும்பத்திற்கு ஷெல்கே பெற்ற விருதுப் பணத்தில் பாதியை நன்கொடையாக அளித்தார்.
மேலும் தனியார் நிறுவனங்களிடமிருந்து பணம் மட்டும் விருதுகளை வாங்கவும் அவர் மறுத்துவிட்டார். அந்த பணத்தை தேவைப்படும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பணம் வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து ரயில்வே அமைச்சகம் மத்திய ரயில்வே ஊழியரான ஷெல்கேவுக்கு ரூ .50,000 விருது வழங்குவதாக அறிவித்தது. பார்வைக் கோளாறால் அவதிப்படும் சஹில் ஷிர்சாத் என்ற சிறுவனுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்ய ரூ .25,000 நன்கொடை வழங்க அவர் முடிவு செய்துள்ளார்.
மேலும் சிறுவன் குடும்பம் வறுமையில் வாடுவதை அறிந்தேன், அவருக்கு கல்வி கொடுக்க அவர்களால் முடியல்விலை. நான் சிறுவனைக் காப்பாற்றியதால், அவரது பிரகாசமான எதிர்காலத்திற்காக விருதுப் பணத்தில் பாதியை நன்கொடையாக வழங்க முடிவு செய்தேன் ஷெல்கே கூறியுள்ளார். ஷெல்கே பட்டப்படிப்பு முடிந்து 2016 இல் ரயில்வேயில் பாயிண்ட்மேனாக சேர்ந்த அவர் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது துணிச்சல் வெளிச்சத்திற்கு வந்த பிறகு ஒரு கார்ப்பரேட் நிறுவனம் அவருக்கு வீடு மற்றும் மோட்டார் சைக்கிளை பரிசளித்தது.மேலும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அவருக்கு ரொக்க விருதுகளை வழங்க முன்வந்தன ஆனால் அவர் பணத்தை ஏற்க மறுத்துவிட்டார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மக்கள் ஒரு மோசமான சூழ்நிலையை சந்தித்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பணத்தை கொடுக்குமாறு நான் அவர் கூறியுள்ளார். ஆரம்பத்தில் அவர் தனது பெற்றோருக்கும் மனைவியுக்கும் இந்த சம்பவம் குறித்து கூறவில்லை. சி.சி.டி.வி காட்சிகளை நானே பார்த்தபோது நான் அதைச் செய்தேன் என்று என்னால் நம்ப முடியவில்லை என்று கூறியுள்ளார்.
-சுரேந்தர்.
Comments