கோடை காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!

   -MMH

கோடை வெயில், கடந்த மார்ச் மாதத்தின் பாதியில் இருந்தே தமிழக மக்களை வாட்டி வதைக்க தொடங்கியுள்ளதை அடுத்து உடலுக்கு குளிர்ச்சியான மற்றும் இயற்கையான உணவுகளை மக்கள் அதிகளவு வாங்கி சாப்பிட ஆரம்பித்து விட்டனர். கோடை காலத்தில் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்று நமக்கு நன்கு தெரியும். ஆனால், எந்த உணவுகளை சாப்பிட கூடாது என்று தெரியுமா? அந்த வகையில், நண்டு, சிக்கன், இறால் போன்ற அசைவ உணவுகளை கோடை காலத்தில் தவிர்ப்பது நல்லது, ஏனென்றால் இந்த உணவுகள் உடலின் வெப்பத்தை அதிகரிப்பது மட்டும் இன்றி வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி உடல் நீரை வற்றவைத்துவிடும். அதே சமயம், புளிப்பு, உப்பு மற்றும் காரம் நிறைந்த உணவுகளை தவிர்ப்பது உடலுக்கு நல்லது.

மேலும், பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், பட்டை மசாலா பொருட்கள் போன்றவை உணவில் காரத்தினை அதிகளவு கொடுக்கும் என்பதால், இந்த பொருள்களையும் நமது உணவில் தவிர்ப்பது நல்லது. மேலும், அடிக்கடி காபி மற்றும் தேநீர் அருந்துவது, எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவது, போன்ற பழக்கத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக, குளிர்ச்சியான குளிர்பானங்கள் மூலமாக இரத்த குழாய்கள் சுருங்கி உடலின் வெப்பத்தை அதிகப்படுத்தும், அதனால் கோடை காலத்தில் குளிர்ந்த நீர் அல்லது குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்தாமல் இருப்பது நல்லது. தொடர்ந்து, கத்தரிக்காய், கிழங்கு வகைகள் மற்றும் மாவு வகை உணவுகள், பயிறு, எள்ளு, ராகி, அதிகளவு மைதா கலந்த உணவுகள், வேர்க்கடலை, கோதுமை போன்றவற்றை சாப்பிடாமல் இருப்பது நல்லது. குறிப்பாக, சாலையோர பாஸ்ட் புட் உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது.

-சுரேந்திர குமார்.

Comments