கோவில் யானையை கொண்டாடும் மக்கள்!! கோடை வெப்பத்தை வென்ற பாப் கட் செங்கமலம்!!
திருவாரூர்மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் யானையான செங்கமலம் திடீரென மீண்டும் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பல்வேறு விஷயங்களுக்கு பேமஸ். தமிழக அரசியலில் ஒரு காலத்தில் முக்கிய மையமாக இருந்ததுதான் மன்னார்குடி.
இனியும் கூட அப்படி ஆக வாய்ப்பு இருக்கிறது. அதுபோன்று மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில், டெல்டாவில் இருக்கும் மிக அழகிய பெரிய கோவில்களில் ஒன்றாகும். வருடா வருடம் இங்கு நடக்கும் திருவிழா தொடங்கி வெண்ணையடி விழா வரை எல்லாம் பெரிய வைரலாகும்.
இப்படி இருக்கும் மன்னார்குடியின் புதிய அடையாளமாக மாறி உள்ளது, ராஜகோபால சுவாமி கோவில் யானை பாப் கட் செங்கமலம். பாப் கட் வைத்து கொண்டு ஸ்டைலாக வலம் வரும் இந்த யானை கடந்த சில வருடங்கள் முன்பே வைரல் ஆனது. தற்போது திடீரென இணையம் முழுக்க இந்த பாப் கட் செங்கமலம் திடீர் என்று வைரலாகி உள்ளது.
கருங்சிவப்பு நிற பாப் கட் முடிதான் இது பேமஸ் ஆக காரணம். இந்த பாப் கட்டிங் செங்கமலம் கடந்த 2003ம் ஆண்டு மன்னார்குடி வந்தது. அங்கு இருந்த யானையின் மறைவை தொடர்ந்து கோவிலுக்காக இந்த குட்டி யானை வாங்கப்பட்டது. இந்த யானை வந்த போது அதன் தலையில் பெரிய அளவில் முடிகள் இல்லை. இருந்த முடியும் கூட அடிக்கடி உதிர்ந்து வந்தது. பெரிய அளவில் இந்த யானை யாரின் கவனத்தையும் ஈர்க்கவில்லை.
இது மிகவும் சாந்தமான யானை ஆகும். இப்படிபட்ட யானைக்கு கோடை வெப்பம் தக்காமல் இருக்க மூங்கில் கொண்டு தட்டியும், மூன்று மின்விசிரிகளும் அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகரித்து வரும் வெப்பம் செங்கமலத்தை தாக்காமல் இருக்கும் வண்ணம் அதற்கு உணவு, உறைவிடம், உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவை பின்பற்றபடுகின்றது. மேலும் செங்கமலம் நாள் ஒன்றுக்கு மூன்று முறை குளிப்பாதற்காக ஷவர் முறை குளியல் ஏற்பாடு செய்யப்பட்டு தனது உடல் சூட்டை தனித்து உல்லாசமாக கோவிலை வலம் வந்து கொண்டிருக்கின்றது.
நாட்டிலேயே பாப் கட்டிங் யானை செங்கமலம் ஒன்று மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் ஷாம்பு இல்லாமல் குளிக்காது. சுமார் 1 மணி நேரம் தண்ணீரில் ஆட்டம் போடும் என்று கூறுகிறார்கள். இதற்கு தலைமுடியை பராமரிக்க தனியாக மருந்துகளும் பயன்படுத்தப்படுகிறது. தனியாக செலவு செய்யப்படுகிறது. இதை பார்க்க இப்போதெல்லாம் வெளிநாட்டில் இருந்து கூட மக்கள் வருகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-பார்த்திபன், ரைட் ரபீக், ஈசா.
Comments