கோவையில் செய்தியாளர்களுக்கு பரிசோதனை..!!
கோவை மாவட்டம் பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து செய்தியாளருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கோவையில் பணிபுரியும் தனியார் இணையதள செய்தியாளர் ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது தொடர்ந்து, இன்று கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து அனைத்து செய்தியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் முன் களப்பணியாளர்களாக உள்ள செய்தியாளர்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வரும் சூழலில், இந்த பரிசோதனை குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-M.அணஸ், V. ஹரிகிருஷ்ணன்.
Comments