பழுதான மின் கம்பம்!! கண்டுகொள்ளாத மின்சார வாரியம்..!!
வால்பாறை அருகே உள்ள எஸ்டேட் தொழிற்சாலை அருகாமையில் மின் கம்பம் உள்ளது. மின்கம்பம் பழுதடைந்துள்ள நிலையில் உள்ளது.
இதை மின்சார வாரிய ஊழியர்களிடம் பலமுறை கூறியும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை, என கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் இருக்கும் மக்கள் கம்பம் சாய்ந்து விடுமோ என்ற அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.
இதனை கவனத்தில் கொண்டு அப்பகுதியில் உள்ள மின் கம்பத்தை மாற்றித் தருமாறு ஊர் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் மின்சார வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-வால்பாறை செந்தில், ஈசா.
Comments