ஷூவை கடித்து குதறியுள்ள வளர்ப்பு நாய்க்கு உரிமையாளர் கொடுத்த தண்டனை!! - இப்படியுமா..!!
கேரளா மாநிலம் மலப்புரத்தில் வாழ்ந்து வரும் நபர் ஒருவர், செல்ல பிராணியாக நாயை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அந்த நாய் வளர்பவர்களின் வீட்டில் இருந்த ஷூவை விளையாட்டு பொருளாக நினைத்து கடித்து குதறியுள்ளது. இதை பார்த்த வீட்டின் உரிமையாளர் ஆத்திரமடைந்துள்ளார். இதனால், ஆத்திரம் அடங்காத அந்த உரிமையாளர் அந்த அப்பாவி நாயை, தனது ஸ்கூட்டரில் கட்டி, 3 கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்து சென்றுள்ளார். இந்த சம்பவம் கேரளா மாநிலத்தில் உள்ள பெருங்குளத்தில் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், நாயை இழுத்து செல்லும் நபரின் ஸ்கூட்டரை பின் தொடர்ந்து சென்றுள்ளார். ஆனால், அப்போதும் அந்த உரிமையாளர் தனது ஸ்கூட்டரை நிறுத்தாமல் 3 கி.மீ தூரம் வரை நாயை கட்டி இழுத்து சென்றுள்ளார். அதற்க்கு பிறகு தான் அவர் ஸ்கூட்டரிலிருந்து அந்த அப்பாவி நாயை அவிழ்த்துவிட்டுள்ளார். இதனால், அந்த நாயின் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டு கதறி உள்ளது.
இதனையடுத்து இது குறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், இதை யார் எடுத்தாரென்று தெரியவில்லை. அதே சமயம், நாயை ஸ்கூட்டரில் இழுத்துச் சென்றவர் பற்றியும் எந்த விபரமும் தெரியவில்லை.
-சுரேந்தர்.
Comments