கோவை அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து!!

 

-MMH

    கோவை கிணத்துக்கடவு பகுதியில் உள்ள வீரப்ப கவுண்டர் ஊரில் லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து. வீரப்ப கவுண்டனூர் ராமர் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் இவர்  முத்தூர் சாலையில் லாரியை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார் அப்போது அவ்வழியே எதிரே  வந்த மற்றொரு லாரி கார்த்திக் என்பவர் ஓட்டி வந்தார். ஆறுமுகம் ஓட்டி வந்த லாரியின் மீது பலமாக மோதியது இந்த விபத்தில் டிப்பர் லாரி ஓட்டி வந்த ஆறுமுகம் பலத்த காயமடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவ்விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் லாரி ஓட்டி வந்த கார்த்திக் என்பவரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-அருண்குமார்.

Comments