சிங்கம்புணரியில் இன்று தடுப்பூசித் திருவிழா! பெரும் ஆர்வத்துடன் கலந்து கொண்ட மக்கள்!

 

-MMH

        கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக நாடெங்கும் தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிங்கம்புணரி சுற்றுவட்டாரத்தில் தடுப்பூசி போடும் பணியை பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையம் முன்னெடுத்து வருகிறது. கடந்த 09/04/21 அன்று சிங்கம்புணரி மக்கள் மன்றத்தில் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாமில் 136 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டு பயன்பெற்றனர்.

இன்று பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சிங்கம்புணரி அரிமா சங்கம் இணைந்து தடுப்பூசி திருவிழா நடத்தப்படுகிறது. இன்றைய முகாமில் சிங்கம்புணரி வருவாய் வட்டாட்சியர் திருநாவுக்கரசு, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள், சிங்கம்புணரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியைகள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தடுப்பூசி திருவிழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு அவர்கள் தலைமையில் மருத்துவர் முத்தமிழ் செல்வி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தினகரன், சுகாதார மேற்பார்வையாளர்கள் மதியரசு, எழில்மாறன் மற்றும் முஹம்மது ஃபாஹிர், பகுதி சுகாதார செவிலியர் மங்கையர்க்கரசி, கிராம சுகாதார செவிலியர் இளவரசி மற்றும் சாந்தி, சிங்கம்புணரி அரிமா சங்கத்தின் பொருளாளர் செல்வம் ஆகியோர் முன்னின்று தடுப்பூசி திருவிழாவை நடத்தி வருகின்றனர்.

-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments