புலிகள் சரணாலயம் ஆக மாறிவரும் பாலக்காடு மாவட்டம்!!

  -MMH 

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் தமிழக எல்லையில் அமைந்துள்ளது பரம்பிக்குளம், புலிகள் சரணாலயம் ஆக மாறிவருகிறது. இந்த அடர்ந்த வனப்பகுதியில் 643.66 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கேமராக்களை பொருத்தி கேரள வனத்துறை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனம் இணைந்து கடந்த ஆண்டு (2020) நவம்பர் மாதம் முதல் 2021 ஜனவரி மாதம் வரை நடத்திய ஆய்வில் 35 புலிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து பரம்பிக்குளம் புலிகள் சரணாலய கள இயக்குனர் விஜயானந்த் கூறுகையில் "கடந்த ஆய்வில் கண்டறியப்பட்ட புலிகளை விட இப்பொழுது புலிகள் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் ஆனைமலை புலிகள் காப்பகம் உட்பட அருகில் வனப்பகுதிகள்  இருப்பதாலும், முறையான கண்காணிப்பு, வாழ்விட பாதுகாப்பு, காட்டுத்தீ கட்டுப்பாடு, மனித குறுக்கீடு தவிர்த்தது போன்றவையே புலிகளின் எண்ணிக்கை உயர காரணம்" என்றார்.

-M.சுரேஷ்குமார்.

Comments