தடுப்பூசி நமக்கு தேவையா...? இல்லையா...??

     -MMH
     கொரோனா வைரஸுக்கு எதிராக தயாரிக்கபடும் தடுப்பூசியானது  ஆய்வகத்தில் இரு முறைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றது .

ஒன்று நேரடியாக  கோவிட் 19 வைரஸினை செயலிழக்க செய்து தயாரிக்கபடுவது , மற்றொன்று சிப்பன்சி இடமிருந்து அடனோ வைரஸை எடுத்து அதன் வீரியத்தினை குறைத்து தயாரிக்கபடுவது.

தடுப்பூசிகள் போடலாமா ! வேண்டாமா ! என்ற விவாதம் பன்னெடுங்காலமாக அலோபதி மருத்துவர்களுக்கும் -  மாற்றுமுறை மருத்துவர்களுக்கும் இடையே நடைபெற்று வந்த நிலையில் நடிகர் விவேக் உடைய மரணம் இன்னும் வார்த்தை போரினை உருவாக்கி இருக்கின்றது.

பொதுவாக தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் காய்ச்சல், தலைவலி, மூட்டுவலி முதலான லேசான பக்கவிளைவுகள் வரும் என்பதை அலோபதி மருத்துவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். ரத்த உறைவு ஏற்படுதல் , மாரடைப்பு நிகழுதல் போன்ற தீவிரமான பக்கவிளைவுகள் அரிதினும் அரிதாகவே நடப்பதாகவும்  வாதிடுகிறார்கள்.  பிரிட்டனின்  மொத்த மக்கள் தொகையில் தடுப்பூசி போடப்பட்ட சுமார் 15% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது , அப்படி  போடப்பட்ன 1.8 கோடிப் பேரில் 30 பேருக்கு மட்டுமே ரத்த உறைவு ஏற்பட்டதாகக் தெரிவிக்கின்றனர்.

அதுவே இந்தியாவைப் பொறுத்தவரை, மார்ச் 31, 2021 வரை 6.3 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. அவர்களுள் தடுப்பூசி போட்டுக்கொண்ட 28 நாட்களுக்குள் 180 பேர் மரணமடைந்திருப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மரணங்கள் குறித்து தேசிய தடுப்பூசிகளால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் கண்காணிக்கும் குழு ஆய்வு செய்துவருகிறது. இந்த அளவு என்பது ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி போட்டால் 0.3 என்ற மிக மிகக் குறைவான அளவிலேயே வருகிறது என்கிறனர் .

கடந்த ஏப்ரல் 1ம் தேதிவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது  8,89,490ஆக இருந்தது, மேலும் புதிதாக அன்றைய தினத்தின் தொற்று ஏற்பட்டோர் எண்ணிக்கையானது  2,817ஆக அதிகரித்தது இருந்தது. ஏப்ரல் 1 முதல் 20 வரையிலான நிலவரப்படி மொத்த பாதிப்பின் எண்ணைக்கையானது  10,13,378ஆகும். 

நேற்றைய  புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 10,986 ஆகும். இதன்படி பார்க்கும்போது, தமிழகத்தை பொறுத்தவரை நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு  வீதம் உயர்ந்துகொண்டே வருகிறது, 

இதுவே மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்  நாடு முழுக்க 2,59,170 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. பாதிப்புகளின்  மூலம் பறிபோகும் உயிர்களை கணக்கிடுகையில் , தடுப்பு மருந்துகளின் மூலம் பாதுக்காக்கபடுவோர்களின் எண்ணிக்கை அதிகமல்லவா என்றொரு வாதம் இதம் மூலம் எழலாம்! தடுப்பூசி தேவையா?  இல்லையா? என்பது . முடிவு நமது கைகளில் தான்.

-நவாஸ், சென்னை.


 

Comments