காவல்துறையின் பொறுப்பான நடவடிக்கையால்..! மாஸ்க் முகங்களாக மாறிய மன்னார்குடி மக்கள்..!!

 

-MMH

கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு அதிகரித்துவரும் சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில். ஆங்காங்கே காவல்துறையின் கெடுபிடிகள் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறதஅதில் ஒரு பகுதியாக  மன்னார்குடி முழுவதும் காவல்துறையினர் முகக் கவசம் அணியாமல் வரும் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும், நிறுத்தி முகக் கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதோடு அரசியல் தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் என பாரபட்சம் பார்க்காமல் அவர்களுக்கு அபதாரம்,விதித்தும்   அறிவுரை வழங்கியும், வருகிறது.

இந்த கோரோனா தோற்று பரவும் காலகட்டத்தில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் மக்களுடைய உயிர்களை காக்கும் வகையிலும் மன்னார்குடி டிஎஸ்பி. இளஞ்செழியன். அவர்கள் சிறந்த முறையில் செயலாற்றி வருவதால், டிஎஸ்பி அவர்களுக்கும் மன்னார்குடி காவல்துறையினருக்கும் பாராட்டு குவிந்து வருகிறது. 

நாளைய வரலாறு செய்திக்காக,

-ரைட் ரபீக், ஈசா.

Comments