தேவ கோட்டையிலிருந்து மதுரைக்கு புகை இல்லா பேருந்து அறிமுகம்!

     -MMH

தேவகோட்டையில் இருந்து மதுரைக்கு முதன் முறையாக புகையில்லா பயணியர் பேருந்து இயக்கப்பட்டது. இது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாகனங்களில் இருந்து டீசலை எரித்து அதிலிருந்து கிடைக்கும் உந்து சக்தியைக் கொண்டு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த முறையில் பெட்ரோல், டீசல் எரிக்கப்பட்டு வெளியிடப்படும் புகையினால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. 

எனவே சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில் புகையில்லா வாகனங்கள் தயாரிப்பில் நிறுவனங்கள் போட்டியிட்டு வருகின்றன. அசோக் லேலன்ட் நிறுவனம் பாரத் ஸ்டேஜ் 6 தரமுள்ள பேருந்து இன்ஜினை தயாரித்துள்ளது. இதில் டீசல் எரிக்கப்படும்.

ஆனால் வாகனத்திலிருந்து புகை  வெளியேறாத தொழில் நுட்ப வசதி செய்யப்பட்டுள்ளது.

புகையில்லாத பேருந்து இன்ஜின் விலை 26 லட்சம் ரூபாயாகும். விலை அதிகம் இருந்தாலும் சுற்றுச்சூழல் மாசு இல்லாமல் பயணிகள் பேருந்து இயக்கப்படுவது தென் தமிழகத்தில் முதன் முறையாகும்.

இதுகுறித்து தனியார் பேருந்து உரிமையாளர் நாச்சியப்பன் கூறியதாவது 'சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் பி 6 ரக இன்ஜின் சேஸ் வாங்கி பயணிகள் பேருந்து உருவாக்கப்பட்டுஉள்ளது. இதில் டீசல் எரிக்கப்பட்டாலும் புகை வெளியேறாதவாறுதொழில் நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக சாதாரண பேருந்துகளை விட 6 லட்சம் அதிகமான விலையில் வாங்கப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழலை பாதிக்காது என்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது. முதன் முதலில் தேவகோட்டையிலிருந்து காரைக்குடி வழியாக மதுரைக்கு இந்த பேருந்து இயக்கப்படுகிறது' என அவர் தெரிவித்தார்.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments