பொள்ளாச்சி நியூ ஸ்கீம் ரோட்டில் தவறவிட்ட லேப்டாப்..!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாகாலிங்கபுரம் நியூ ஸ்கீம் ரோட்டில் 22.04.2021ம் தேதி இரவு கார்த்திக் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தபோது லேப்டாப் தவறவிட்டார்.
அவருக்கு பின்னால் வாகனத்தில் சென்று கொண்டு இருந்த ஆஷிக் அஹமது என்பவர் லேப்டாப் வைத்திருந்த பையை எடுத்து பத்திரமாக மகாலிங்கபுரம் காவல் நிலையத்தின் ஒப்படைத்தார்.
இதை தொடர்ந்து லேப்டாப் உரிமையாளர் கார்த்தி இடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நற்செயலை செய்த ஆஷிக் அஹமது அவர்களை பாராட்டி பொள்ளாச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் K.G. சிவகுமார் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
தனக்கு கிடைத்த பொருளை தான் எடுத்து பயன்படுத்தும் ஒரு சிலரில், அதன் மேல் ஆசைப்படாமல் காவல் நிலையம் கொண்டு வந்து ,உரியவரிடம் ஒப்படைத்த ஆஷிக் அஹமது செய்தது மிகவும் பாராட்ட கூறியது என பொள்ளாச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் K.G. சிவகுமார் அவர்கள் தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V.ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.
Comments