மருத்துவமனையில் படுக்கைகள் இல்லை.. தரையில் படுத்திருக்கும் நோயாளிகள்.! பரிதாபநிலை!!

 

-MMH

              திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வார்டில் போதிய படுக்கை வசதி இல்லாததால் கொரோனா நோயாளிகள் கீழே படுத்து வைத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அவசர சுகாதார நிலை பிரகனப்படுத்தும் அளவுக்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை. ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் திருவள்ளூர் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதி இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. திருவள்ளுர் அரசு பொது மருத்துவமனையில் உள்ள 150 படுக்கைகள் முழுவதுமாக நிரம்பி உள்ளன.

இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் 150 மேற்பட்ட கொரோனா நோயாளிகள் வருவதால் போதிய படுக்கை வசதி இல்லை என்று கூறப்படுகிறது,நேற்று ஒரே நாளில் 150 கொரோனா நோயாளிகள் அதிகரித்ததால் இட வசதிக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் கொரோனா நோயாளிகள் பலர் தரையில் படுக்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது 'மாற்று இடத்தில் படுக்கை வசதி செய்து தருகிறோம் என்று அவர்கள் உறுதியளித்துள்ளனர். தொடர்ந்து மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனை செய்ய அதிக அளவில் மக்கள் வருவதும் அதிகரித்துள்ளது.

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் மற்றும் நர்ஸுகளை கொரோனா தாக்கி வருவதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்றைய தினம் மட்டும் 2 மருத்துவர்கள், 4 செவிலியர்கள் உள்பட 6 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.

Comments