தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளரும் திமுக சுற்றுச்சூழல் அணியிண் மாநிலச் செயலாளருமான கார்த்திகயே சேனாபதியின் வாழ்த்தறிக்கை!!
தேர்தல் நாளான ஏப்ரல் 6 அன்று செல்வபுரம் வாக்குச்சாவடியில் திரு. வேலுமணியின் ஆட்களும், பாஜக ஆட்களும் இணைந்து நமக்கு எதிராகக் கலவரத்தைத் தூண்டவும், மக்கள் நமக்கு அளித்து வரும் ஆதரவைத் தடுக்கும் நோக்கிலும் பெரும் ரகளை செய்து கலவரம் செய்ய முயற்சி செய்தார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அவர்களின் எண்ணம் பலிக்காததால் என் மீதும் கழக உடன்பிறப்புகள் மீதும் தாக்குதல் நடத்தத் தொடங்கினார்கள்.
அப்போது நமது கூட்டணிக் கட்சியான மனிதநேய ஜனநாயகக் கட்சியின் நிர்வாகி திரு. பீர் முகம்மது அவர்கள் எங்களைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று வாகனத்தில் அனுப்பி வைத்தார். எங்கள் மேல் கொண்ட அன்பால் அங்கே கூடியிருந்த ரவுடிகளின் தாக்குதலைத் தன் மேல் வாங்கிக் கொண்டு எங்களின் பாதுகாப்பிற்குத் துணை நின்றார்.
அவரைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. அவருக்கு எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். என்று தனது முகநூல் பக்கத்திலும் வாழ்த்து தெரிவித்தார் நன்றிமறவா நல்லவர் என மக்கள் பாராட்டினர்!!!
நாளையவரலாறு செய்திக்காக,
-ஹனீப் தொண்டாமுத்தூர்.
Comments