கோழி கழிவு கொட்டுவதால் ஊருக்குள் சிறுத்தை புலி!! வால்பாறை மக்கள் பீதி..!!

    -MMH 

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அரசு கலைக் கல்லூரிக்கு அருகில்  உள்ள குப்பை கிடங்கில் கோழி கழிவுகளை கொட்டுவதாளும், குப்பைகளை கொட்டுவதாலுளும், சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இதனை சரி செய்யும் வகையில் குப்பைத் தொட்டிகள் அமைத்து தர வேண்டும் என்றும் சாலை ஓரங்களில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும் என்றும் நகராட்சி நிர்வாகத்திடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், வால்பாறை மக்கள் முன்னேற்ற இயக்க நண்பர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-திவ்ய குமார், ஈசா.

Comments