மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் நிறைவு!!

     -MMH
     மதுரை என்றாலே நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் திருக்கோயில். அதுவும் சித்திரை மாதம் வந்து விட்டால் மதுரையே திருவிழாக்கோலம் பூண்டு விடும் தென்மாவட்டத்தில் உள்ள மக்கள் எல்லாம் மதுரைக்கு 15 நாட்களுக்கு படையெடுப்பர் .

மீனாட்சி திருக்கல்யாணத்தை காண தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவது வழக்கம்.

அழகர் கோயிலிலிருந்து கள்ளழகர் தன் தங்கை மீனாட்சியின் திருமணத்தை காண மதுரை வருகை தரும் நிகழ்வு சிறப்பாக தொன்று  தொட்டு நடைபெறுகிறது.

இந்த ஆண்டு நோய் தொற்று காரணமாக சித்திரைத் திருவிழா கோவில் வளாகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் இந்த காட்சியை காண இந்து சமய அறநிலைத்துறை நேரலையாக டிவி மற்றும் யூட்யூப் சேனல்களில் ஒளிபரப்ப திட்டமிட்டிருந்தது.

அதன்படி இன்று காலை மீனாட்சி திருக்கல்யாணத்தை  நேரலையாக ஒளிபரப்பினர். காலை ஏழரை மணிக்கு தொடங்கிய மீனாட்சி திருக்கல்யாண வைபவம் இனிதே சுமார் 9 மணியளவில் நிறைவுற்றது. காலை 9.30 முதல் 2.30 வரை பக்தர்கள்  திருமண மண்டபத்தில்  மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

அதே போல அழகர் கோயிலிலிருந்து கள்ளழகர் புறப்பாடு உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும் திருவிழா நேரலையாக ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 25: ஸ்ரீ கள்ளழகர் கோவிலிருந்து புறப்பாடு.

ஏப்ரல் 26 : எதிர்சேவை நிகழ்வு

ஏப்ரல் 27 : வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளல்.

ஏப்ரல் 30ஆம் தேதி வரை உள்ள அனைத்து கோவில் நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்ப படும் என்று அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

இன்று காலை நடைபெற்ற மீனாட்சி  திருக்கல்யாணத்தில்  சுந்தரேஸ்வரர் அன்னை மீனாட்சிக்கு தாலி கட்டிய வைபவம் கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.

சிவாச்சாரியார்கள் மற்றும் ஓதுவார்கள் மந்திரங்கள் முழங்க நாதஸ்வரம் மற்றும் மேளதாளம் இசை ஒலிக்க அன்னை மீனாட்சியின்  திருக்கல்யாணம் இனிதே நிறைவுற்றது .

நாளைய வரலாறு செய்திக்காக,

-V.ராஜசேகரன்.

Comments