அள்ளப்படாத கழிவு மண் விபத்தை ஏற்படுத்தும்!! அச்சத்தில் மக்கள்..!!

  -MMH

போத்தனூர் செட்டிபாளையம் ரோடு ஜிடி டேங்க் எதிரில்  பஸ் பயணிகள் நிற்கக்கூடிய இடத்தில்,  இரண்டு மாதங்கள் தேங்கிக்கிடக்கும்  கழிவு மண்களால் வாகன ஓட்டிகளுக்கும் சிரமம் உள்ளாகி வருவதாக புகார்கள் கூறுகின்றனர்.

இந்த மண் கழிவு குவிந்து கிடப்பதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு முன்பு அந்தப் பகுதியில் விபத்து நடைபெற்று  உயிர் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

இதனை கவனத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம். உடனடியாக அந்த மண் கழிவை அகற்றி தரவேண்டும் என்று. அங்குள்ள பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளை வரலாறு செய்திக்காக,

-ஆரோக்கியராஜ், ஈசா.

Comments