பொள்ளாச்சி அருகே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு முகக்கவசம்..!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டி.நல்லிகவுண்டன் பாளையத்தை சேர்ந்த தவமணி என்ற பெண் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் கடைக்கு வருபவர்களிடம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தொடர்ந்து அறிவுறுத்தி வந்தார்.
ஆனால் சிலர் தொடர்ந்து முகக்கவசம் அணியாமல் கடைக்கு வந்ததாக தெரிகிறது. இதையடுத்து தவமணி தனது டீக்கடைக்கு எதிரே உள்ள மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு முகக்கவசம் அணிவித்து கிராமமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதையடுத்து கடைக்கு வருபவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து வருகின்றனர். தலைவர்களின் சிலைக்கு முகக் கவசம் அணிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தவமணியை கிராமமக்கள் பாராட்டினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி நிருபர்.
Comments