தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம்!!

     -MMH

தமிழகம், புதுச்சேரி, கேரளா உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. மூன்றாவது கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே நாளில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. அதற்காக தேர்தல் கமிஷன் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 4, 5, 6ஆம் தேதி மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது . அதனை ஏற்று தமிழக அரசு 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. 


மூன்று நாட்கள் தொடர் விடுமுறையின் காரணமாக மது பிரியர்கள் நேற்று காலை முதலே வரிசையில் நின்று  மதுபானங்களை வாங்கி சென்றனர்.  நேற்று மாலை அதாவது மூன்றாம் தேதி மாலை தஞ்சை மற்றும் அதனை சுற்றி அமைந்துள்ள  பெரும்பாலான டாஸ்மார்க்  கடைகளில்  கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. ஒருவரை முண்டியடித்து தள்ளிக் கொண்டு மது வகைகளை வாங்குவதற்கு முயற்சி செய்தனர். 

சில மதுபான கடைகளில் காவல்துறை அதிகாரிகள் பணியில் இருந்ததையும் காண முடிந்தது. தஞ்சை பேருந்து நிலையம் அருகே உள்ள கடைகளில் கூச்சலும் நெரிசலும்  காணப்பட்டதால் அந்த வழியே செல்பவர்கள் முகம் சுளித்துக் கொண்டு செல்வதை காண முடிந்தது.

 இவ்வளவு தூரம் மக்களை மது  எனும் கொடிய அரக்கன் ஆட் கொண்டிருக்கிறான். அந்த நிலைக்கு  கொண்டு சென்றிருக்கும் அரசாங்கம் எந்த ஒரு நாட்டிலும் இதுபோல் இருந்ததில்லை என்பதை அங்கு உள்ளவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

 இந்த வேதனையான காட்சிகளை வேதனையுடன் பதிவு செய்த சமூக ஆர்வலர்கள்.

-V.ராஜசேகரன், தஞ்சாவூர்

 

Comments