ஸ்டெர்லைட் விவகாரம்!! கண்டுக்கொள்ளாத அனைத்துக்கட்சி கூட்டம்!!

   -MMH

கொரோனாவின் இரண்டாம் அலை நாடுமுழுவதும் வேகமாக பரவிவரும் வேளையில் வெண்டிலேட்டர் உதவியோடு சுவாசிக்கும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் நோயாளிகளின் உறவினர்கள் காலி சிலிண்டர்களுடன் ஆலைகளில் தவம் கிடப்பதும், கிடைக்க தாமதமாவதால் தினம் தினம் நோயாளிகள் மாண்டுக்கொண்டுவருவதும் உலக நாடுகளின் செய்திகளில் தலைப்புச் செய்திகளாக வலம் வருகின்றன.

இந்நிலையில் சென்னைக்கு அருகே இருக்கும் திருபெரும்புதூரில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜன்களை தமிழகத்தின் அனுமதியினை பெறாமல் தான் தோன்றித்தனமாக மத்திய அரசு ஆந்திரம் மற்றும் தெலுங்கானா மாநிலத்திற்கு வழங்கும் முயற்சிகளை மேலோட்டமாக தமிழக அரசு கண்டித்தாலும், பல்லாயிரம் பேர்களின் வாழ்வை புற்றுநோயோடு  புரட்டிபோட்ட ஸ்டெர்லைட் ஆலையினை மூடிடவேண்டாமா என  நூறாவது நாளைய போராட்டத்தில் ஆட்சியரிடம், நியாயம் கேட்க சென்றவர்களின் 13 பேர்களின் உயிர்கள் பறிக்க காரணமாயிருந்த "வேதாந்தா", தன் ஆலை துவக்கப்பட்டால் தானே ஆக்ஸிஜன் என்னும் உயிர் வாயுவை தருகிறேன் என நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது.

பொதுவாக மருத்துவ பயன்பாட்டிற்காகவும் , தொழிற்கூட பணிகளுக்காகவும் உபயோகபடுத்தபடும் ஆக்ஸிஜன் வாயு , மருத்துவ பயன்பாட்டிற்காக 99.9 சதவிதம் தூயதாகவும் , தொழிற்சாலைக்கு 92.3 -94 சதவிதம் தூயதாகவும் இருக்கும். வேதாந்தாவின் ஸ்டெர்லைட் நிறுவனம் வழங்க தயாராக இருப்பதாக கூறும் தூய்மைக்குறைவான ஆக்ஸிஜனை பெறலாமா வேண்டாமா என்ற  மக்கள் கருத்துக்கூட்டங்கள் தூத்துக்குடியில் நடத்தப்பட்டபோது எழுந்த எதிர்ப்புகளை அங்கிகரித்திடலாமா வேண்டாமா என்று இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது .

பிரதான ஸ்டெர்லைட் எதிர்ப்பு கட்சிகளான மதிமுகவையும் - விசிகவையும் புறக்கணித்து தீர்மானம்  ( ஆக்ஸிஜன் பயன்பாட்டிற்காக ஸ்டெர்லைட் ஆலையினை துவங்கலாம் என்று) இயற்றப்பட்டது, மக்களுக்கு பயனளிக்குமோ இல்லையோ நிச்சயமாக இதனை வாய்ப்பாக பயன்படுத்தி அகோர பசியில் இருக்கும்  வேதாந்தா ஸ்டெர்லைட்டை துவக்கி மிச்சம் மீதி உள்ள தூத்துக்குடி மக்களின் உயிர்களை அரித்திடவே செய்யும். அதற்கு மாநில அரசு இடமளிக்காமல் வேறுவகையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையினை பூர்த்தியாக்கிட முயற்சித்திட வேண்டும்.

-நவாஸ், சென்னை.

Comments