ஓடும் லாரியில் ஓட்டுனர் மாரடைப்பால் மரணம்..!!
கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் ஓடும் லாரியில் டிரைவர் மாரடைப்பால் மரணம்.
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை சேர்ந்தவர் வினோத். இவர் கலிங்க நாயக்கன்பாளையம் துரைராஜ் ட்ரான்ஸ்போர்ட்டில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
சம்பவம் நடந்த நேற்று, பாலக்காட்டில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. பிறகு அவர் சாலையோரமாக லாரியை நிறுத்திவிட்டு ஸ்டியரிங்கில் சாய்ந்தபடி அப்படியே மரணமடைந்துவிட்டார். மதுக்கரை சப்-இன்ஸ்பெக்டர் திருமலைசாமி அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
நாளை வரலாறு செய்திக்காக,
-ஷாஜகான், ஈசா.
Comments