வால்பாறை குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை புலிகள் சர்வ சாதாரணமாக நடமாட்டம்!!
வால்பாறை குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை புலிகள் சர்வ சாதாரணமாக இரவு நேரங்களில் நடமாடி வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு சரியாக 9 மணியளவில் வாழைத்தோட்ட குடியிருப்பு பகுதியில் சிறுத்தைப்புலி சர்வ சாதாரணமாக வந்து சென்றது.
கோழிகள் மற்றும் ஆடுகளை அடிக்கடி சூரையாடி செல்கின்றன. இதுகுறித்து வனவிலங்கு காப்பகத்தில் கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர் இப்பகுதி மக்கள்.
மேலும் அதிகாரிகள் கூண்டு வைத்து நாங்கள் பிடிக்கிறோம் என்று வாயளவில் மட்டும் சொல்லி வருகின்றனர். இதுவரை எந்த இடத்திலும் குண்டு வைக்கப்படவில்லை பலமுறை கூறியும் தகவல் கொடுத்தும் எந்த நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மேலும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இரவு 8 மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியில் வந்து நடமாட முடியாது என்பது சம்பந்தப்பட்ட, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பது ஒட்டுமொத்த வால்பாறை மக்களின் கோரிக்கையாகும்.-G.திவ்யா குமார், வால்பாறை.
Comments