போத்தனூரில் செல்போன் நூதன திருட்டு..!!
செட்டிபாளையம் ரோடு ஈஸ்வர் நகர் அருகில், அமைந்துள்ள தேநீர் கடையில் பணிபுரியும் கார்த்திக் என்பவரிடம், குளிர்சாதன நிறுவனத்தில் பணிபுரிவது போல் வந்த மர்ம நபர், அங்கு உள்ள குளிர்சாதன பெட்டியை சரி செய்யும் போது,"உங்கள் மொபைலை கொடுங்கள் நான் அதில் பார்கோடு சரிபார்க்க வேண்டும்" என்று கூறியபடி 18000 ரூபாய் மதிக்கத்தக்க செல்போன் ஒன்றை வாங்கியபடி சற்று நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். செல்போனை பறிகொடுத்த கார்த்திக் அங்குமிங்கும் அல்லாடி பார்க்க மொபைலை திருடிய நபர் மின்னல் வேகத்தில் சென்று விட்டார்.
சாதாரணமாக ஒரு செல் போன் வாங்குவதற்கு 5000, முதல், 30,000 ரூபாய் வரை நாம் செலவிடுகிறோம். இதுபோன்ற மர்ம நபர்களின் திருட்டு, கோவை மாவட்டத்தில் அதிகரித்து வருவதால், இளைஞர்களும், பொதுமக்களும், விழிப்புடன் இருக்க வேண்டும் என்று காவல்துறையினரும், சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.
-ஈசா.
Comments