சிங்கம்புணரி பகுதியில் கொரோனாவை கட்டுப்படுத்துவது எப்படி? அனைத்துத்துறை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம்!

 

-MMH

           அதிகரித்து வரும் கொரோனா தொற்றை, சிங்கம்புணரி சுற்று வட்டாரத்தில் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் சிங்கம்புணரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 'கொரோனா பாதித்த நபர்களை 2 மணிநேரத்தில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்ப்பது குறித்தும், சிங்கம்புணரி பகுதியில் கொரோனா தொற்றால் இதுவரை 16 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும்,  சேர்வைகாரன்பட்டி கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பெருந்தொற்றை சிங்கம்புணரி வட்டத்தில் கட்டுப்படுத்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகளான முககவசம், 

சமூக இடைவெளி பின்பற்றாத தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறைகளை தாலுகா அளவில் உள்ள அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செய்வது குறித்தும் விரிவான ஆலோசனை கூட்டம் சிங்கம்புணரி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வருவாய்த்துறை, சுகாதாரம், காவல்துறை, பேரூராட்சி, ஊரகவளர்ச்சித்துறை, ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டு கொரோனா கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments