குப்பைகளை அகற்றாவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம் பொதுமக்கள் ஆவேசம்..!!

     -MMH
    கோவை மாவட்டம் வால்பாறை ஸ்டான் மோர் செல்லும் பாதையில் மாநகராட்சி வாகனங்கள் தினம்தோறும் குப்பைகளை கொண்டு கொட்டுவதால் இறைச்சி கழிவு மற்றும் மனிதக் கழிவுகளையும் கொட்டி வருவதாக அந்தப் பகுதி மக்கள் புகார் கொடுத்து உள்ளனர்.

மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் இதுபோன்ற செயல்களில் மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் செய்து வருவதால் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை துர்நாற்றம் வீசி வருவதால் இதனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுப்பதாகவும் குப்பை கொட்டுவதை நிறுத்தாவிட்டால் அந்தப் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட போவதாக மன வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். 

சுற்றுலா தலமான வால்பாறை பகுதியில் சுற்றுலா வாசிகளுக்கு ஏற்ப வாகன வசதிகள் இருக்கும் இடத்தில் இதுபோன்ற குப்பைகளை கொட்டி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையிலும் அந்த இடத்தில்தான் தினந்தோறும் ஓட்டுநர்கள் அமர்ந்து உணவு அருந்துவதாகவும் அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு மக்கள் சாலை மறியல் ஈடுபடுவதற்கு முன் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும் என்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் அந்த இடத்தில் குப்பைகளை அகற்றி கொடுக்க வேண்டும் என்றும் வால்பாறை மக்கள் முன்னேற்ற இயக்கமும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழுக்காக,

-திவ்ய குமார்,  ஈசா.

Comments