சோதனை செய்ய வந்த அதிகாரியிடம் செலவுக்கு பணம் கேட்ட வேட்பாளர்!!

    -MMH

கோவை மாவட்டம், வால்பாறை சட்டசபை தொகுதி அ.தி.மு.க., மற்றும் இந்திய கம்யூ., வேட்பாளர்கள் தங்கியிருந்த தனியார் விடுதியில், தேர்தல் பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறையினர் சோதனை செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், வால்பாறை தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் அமுல் கந்தசாமி, தி.மு.க., கூட்டணியில் இந்திய கம்யூ., வேட்பாளர் ஆறுமுகம் போட்டியிடுகின்றனர். இரண்டு வேட்பாளர்களும், பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளையத்திலுள்ள, தனியார் விடுதியில், தங்கியுள்ளனர்.

இந்நிலையில், விடுதியில் வேட்பாளர்கள் பணம் வைத்துள்ளதாக, தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு துணை பி.டி.ஓ., ஆனந்த் தலைமையிலான பறக்கும் படையினர், பொள்ளாச்சி வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்று பேருடன் இணைந்து, விடுதிக்கு சென்றனர்.

அங்கு, வேட்பாளர்களின் அறைகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தங்கியிருந்த அறைகளில் சோதனை செய்தனர். மேலும், வேட்பாளர்கள், ஆதரவாளர்களின் கார்களில் தீவிர சோதனை செய்தனர். இரண்டு மணி நேரம் நடந்த சோதனையில், எந்த பரிசுப்பொருளும், பணமும் கிடைக்காததால், அதிகாரிகள் வெறும் கையுடன் திரும்பிச்சென்றனர். இதனால், பரபரப்புஏற்பட்டது.

அ.தி.மு.க., வேட்பாளர் அமுல்கந்தசாமி கூறுகையில், ''இரவு, 12:00 மணிக்கு மேல் தான் அறைக்கு வந்து உறங்கினேன். நள்ளிரவில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், எனது அறையில் சோதனை செய்யவில்லை. அருகிலுள்ள எங்கள் கட்சி நிர்வாகிகள் அறைகள், கார்களில், 'சல்லடை' போட்டு சோதனை செய்தனர். எங்களிடம் எந்தப்பணமும், பொருளும் இல்லை,'' என்றார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி கிழக்கு.

Comments