பொள்ளாச்சி நகராட்சி சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்..!!

     -MMH

     பொள்ளாச்சி நகரில் தொற்று பரவலை தடுக்க கபசுர குடிநீர் வினியோகிக்க சிறப்பு முகாம் நடத்துவதுடன் சுகாதாரப்பணிகளிலும் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர்.

1.பொள்ளாச்சி நகராட்சி, 

2.கோட்டூர் ரோடு

3.நடராஜ் மணியகாரர் காலனி

4.ஆரோக்கிய நாதர் வீதி 

5.டீச்சர்ஸ் காலனி வெங்கடாசலபுரம் 

6.டி.கோட்டாம்பட்டி 

7.நாச்சிமுத்து வீதி 

8.சோழப்பன் வீதி 

9.இந்திரா நகர் 

10.அண்ணா நகர் 

11.பழனியம்மாள் லே-அவுட் 

12.வெங்கட்ரமணன் வீதி குமாரபாளையம் வீதி 

உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒருவர் என மொத்தம்12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட 

1.சின்னாம்பாளையத்தில் மூன்று பேருக்கும் 

2.ஜமீன் ஊத்துக்குளி

 3.சீனிவாசபுரம்

 4.வசியாபுரம்

 5.குஞ்சிபாளையம்

6.சீலக்காம்பட்டி

7.அம்மேகவுண்டனுார்

8.வஞ்சியாபுரம்

9.குண்டலப்பட்டியில் தலா ஒருவருக்கும் என மொத்தம் 11 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதியூர், ஆச்சிப்பட்டி மகாலட்சுமி நகரில் தலா ஒருவருக்கும், ஜமீன்முத்துார், நெகமம் பகுதிகளில், தலா இரண்டு பேருக்கும் என மொத்தம் ஆறு பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. பொள்ளாச்சி நகரம், தெற்கு, வடக்கு ஒன்றியங்களில் மொத்தம், 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

பொள்ளாச்சி நகரில் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களில் நகராட்சி சுகாதாரத்துறை சார்பில், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. கபசுர குடிநீர் வழங்கி முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்,சமூக இடைவெளி பின்பற்றுவதுடன், கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என அதிகாரிகள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V.ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments