ஆண்களுக்கு இணையாக தேங்காய் உரிக்கும் வீரப்பெண்மணி!!
அடுப்பங்கரையில் இருந்த பெண்கள் ஆண்களுக்கு சமமாக பல்வேறு துறைகளில் பணியாற்றி சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது நிதர்சனம். ஆனால் கிராமப்புறங்களில் பெண்கள் இன்னும் வீடுகளில் முடங்கி இருக்கின்றனர் என்பது உண்மை. அதை யாரும் மறுக்க முடியாது.
இருந்தாலும் சாதிக்க தன்னம்பிக்கை இருந்தால் மட்டும் போதும் எந்த தடைகளையும் உடைத்தெறிந்து சாதனைகளைப் படைக்கலாம் என்ற நம்பிக்கையோடு வெளியேறி வருகின்றனர்.
அந்த வகையில் பொள்ளாச்சி அடுத்த தமிழக கேரள எல்லைப் பகுதியான மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள தர்மராஜ் என்பவர் தோட்டத்தில் ஆண்களுக்கு இணையாக ஒரு பெண் தேங்காய் உரிக்கும் பணியில் அர்ப்பணிப்போடு வேலை செய்வதைக் கண்டு வழித்தடத்தில் பயணிப்போர் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். மேலும் அவரை மனதாரப் பாராட்டி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.
Comments