தனியரசு MLA அவர்களை சந்தித்த மஜக நிர்வாகிகள்!!
கோயம்புத்தூரில் தேர்தல் பரப்புரைப் பணிகளை முடித்துவிட்டு திரும்பும் வழியில் தமிழக கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் தலைவர் பாசமிகு சகோதரரும் தனியரசு எம்எல்ஏ அவர்களைத் தாராபுரத்தில் அவரது இல்லத்தில் சந்தித்த போது எடுத்த படம்,
மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ, அவர்களுடன் நடந்த இச்சந்திப்பில் மஜக மாநிலத் துணைச் செயலாளர் நாகை முபாரக், காரோட்டுனர் விமல் ராஜ் ஆகியோரும் உடனிருந்தனர்.
மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ, தமிழக கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் தனியரசு எம்எல்ஏ, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்எல்ஏ ஆகிய மூவரும் 15 வது சட்டசபையில் பல்வேறு பிரச்சினைகளில் இணைந்து செயலாற்றியவர்கள் என்பதும், சமூக பிரச்சனைகளில் ஒருங்கிணைந்து குரல் கொடுத்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நட்பு அடிப்படையில் நேற்று (4/4/21) இரவு சுமார் 11 மணியளவில் இச்சந்திப்பு நடைபெற்றது. தற்போதைய தேர்தல் நிலவரம், கடந்த ஐந்தாண்டு சட்டசபை நிகழ்வுகள், நட்பு ரீதியாக பழகிய அனுபவங்களை பற்றிப் பேசப்பட்ட இந்நிகழ்வு மனதிற்கு இதமாக அமைந்தது.என்று மஜக இணைப்பொதுச் செயலாளர் ரிபாய் தெரிவித்தார்!!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப்,தொண்டாமுத்தூர்.
Comments