இறைச்சிக் கடைகள், தேனீர் கடைகள் 12 மணி வரை அனுமதி வியாபாரிகள் கலக்கம்..!!

  -MMH

நடந்து  முடிந்த  2021ஆம்  சட்டமன்றத் தேர்தலில்  திமுக அரசு பெரும்பான்மையில் வெற்றி  பெற்று  வரும் 7ம் தேதி முதல் தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைய உள்ளது.  அதிகமான கொரோன  பரவலை ஒட்டி  சனி மற்றும் ஞாயிறு மீன் மற்றும் இறைச்சி கடைகள் இயங்காது என அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது தற்போது புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் காரணத்தால்.  அரசு அதற்கு தகுந்தார்போல் புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.இதர நாட்களில் காலை 6 மணி முதல் மதியம் 12 வரை மட்டுமே மீன் கடை மற்றும் இறைச்சிக் கடை இயங்கலாம்.  தேநீர் கடைகளும் மதியம் 12 மணிவரை மட்டுமே   செயல்பட அரசு  உத்தரவு  தேனீர் கடை மற்றும் உணவகங்களில்  அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை  திரையரங்குகள் 20ஆம்  தேதி வரை இயங்காது  அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு. கல்வி கலாச்சார, விளையாட்டுகள், எதுவும்  நடைபெற கூடாது  என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாளை வரலாறு செய்திக்காக,

-L.குமார்,  ஆரோக்கியராஜ்.

Comments