தமிழகத்தில் 15 நாள் முழு ஊரடங்கு காரணமாக அரசுக்கு 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய் வருவாய் இழப்பு!!

 

-MMH

                     தமிழகத்தில் 15 நாள் முழு ஊரடங்கு காரணமாக சுமார் 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று  கூறப்படும் நிலையில்  எதிர்கால அரசின் செலவினங்களில் கடும் பாதிப்பை இந்த ஊரடங்கு ஏற்படுத்தக் கூடும் மேலும் மே 24ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டால் அரசுக்கு டாஸ்மாக் மது பான விலையை ஏற்றுவது போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள நேரிடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக மது பான விலைகள் உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இது குறித்து மது பிரியர் ஒருவர் கூறுகையில் விலையை ஏற்றினால் ஏற்றுக் கொள்ளட்டும் கவலை இல்லை இன்னைக்கு ரூபாய் 500 கொடுத்து கோட்டர் வாங்கி குடித்துக் கொண்டிருக்கிறோம் இன்னும் ரெண்டு நாள் போனால் 700 800 900 ஆயிரம் என்றாகிவிடும் அப்போதும் வாங்கி குடிப்போம் நாங்கள் குடிப்பதால் தான் அரசே நடைபோட முடியும் என்பதால் எங்களுக்கு மகிழ்ச்சி என்றார்.

-M.சுரேஷ்குமார்.

Comments