தமிழகத்தில் கொரோனா பரவல் மே 29,30,31 தேதிக்குள் உச்சத்தை தொடும் ஆய்வில் தகவல்!!
தமிழகத்தில் நேற்று 33059 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது அதே நேரத்தில் 364 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் இதுவரை மொத்த இறப்பு 18369. இந்நிலையில் தமிழகத்தில் வரும் 29ம் தேதி முதல் 31ம் தேதிக்குள் கொரோனா பரவல் உச்சத்தை தொடும் என ஆய்வுத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சூத்ரா என்ற கணிதவியல் கோட்பாடு அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக ஹைதராபாத் ஐஐடி பேராசிரியர் வித்யாசாகர் தெரிவித்தார். தமிழகத்தில் மே 29 இல் இருந்து 31க்குள் கொரோனா உச்சம் தொட்டு பின்னர் குறையும் என்றும் வித்யாசாகர் தெரிவித்துள்ளார். முகக் கவசம் அணிவோம் வீட்டிலேயே இருப்போம் விலகி இருப்போம் கொரோனாவை வெல்வோம் என்ற சிந்தனையோடு
-M.சுரேஷ்குமார், தமிழக துணை தலைமை நிருபர்.
Comments