4 குழந்தைகள் உள்பட குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா!! - அஸ்வினின் மனைவி தெரிவித்து உள்ளார்!!

  -MMH

 4 குழந்தைகள் உள்பட குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என கிரிக்கெட் வீரர் அஸ்வினின் மனைவி தெரிவித்து உள்ளார். ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி வந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள குடும்பத்தினருக்கு ஆதரவாக இருப்பதற்காக போட்டிகளில் தொடராமல் விலகியுள்ளார். இந்த நிலையில், அஸ்வின் மனைவி பிரீத்தி தனது குடும்பத்தில் 4 குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

தொற்று மைய புள்ளியாக எங்களுடைய குழந்தைகளிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவியுள்ளது. வெவ்வேறு வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் வைரசுடன் போராடி வருகிறோம். 3 பெற்றோரில் ஒருவர் வீட்டுக்கு திரும்பியுள்ளனர் என கூறினார். எனவே, நீங்களும், உங்களது குடும்பத்தினரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதே இதற்கு எதிராக போராடுவதற்கான சிறந்த வாய்ப்பு என்று தெரிவித்து உள்ளார்.

--கார்த்திக், தண்டையார் பேட்டை.

Comments