அவசரமாக சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்ட 50ஆயிரம் கோடி!! ரிசர்வ் வங்கி கவர்னர் ஒதுக்கீடு..!!

 

  -MMH

பேரிடர் காலமென்பதால் சுகாதரத்துறை கட்டமைப்புக்கு ரூ 50,000 கோடி அவசர ஊக்கத்தொகை ஒதுக்கீடு ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் இன்று பேட்டி. அளித்தபோது, கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவுவதால் இந்திய பொருளாதாரத்துக்கு புதிய சோதனைகள் வர உள்ளன. நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டு இருக்கிறது. கொரோனாவால் பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் பாதிக்காமல் இருக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும். நிலைமையை ஆர்.பி.ஐ. உன்னிப்பாக கவனித்து வருகிறது. 

சென்ற ஆண்டை விட இந்த வருடம் கொரோனா அலை தீவிரமாக இருந்தாலும் அதன் பொருளாதார பாதிப்பு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஏனென்றால் நாடு முழுவதும் பொது முடக்கம் இல்லை. ஓரிரு மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்கம் இருக்கிறது.

வேறு சில மாநிலங்களில் அதிக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு என பல்வேறு வகையான பொது முடக்கம் இருக்கின்றன. கொரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்துவோம். நாடு முழுவதும் சுகாதாரத்துறை கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடி அவசர ஊக்கத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் வங்கிக்கடனுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கொரோனா கட்டுப்பாடுகளால் மீதமுள்ள ஆண்டு பணவீக்கம் பாதிக்கப்படும் என்று கூறினார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஷாஜகான், ஈசா.

Comments