கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் ரூ. 5000 பரிசு: மத்திய அரசு அறிவிப்பு !!

     -MMH

     கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை சுவாரஸ்யமான வாசகத்துடன் சமூகவலைதள பக்கத்தில் பதிவிடுபவர்களுக்கு ரூ. 5000 பரிசு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசியை நிரந்தர தீர்வாக முன்னிறுத்துகிறது மத்திய அரசு. அதற்காக பொதுமக்கள் அனைவரும் விரைந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

முன்னதாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. அதை தொடர்ந்து 45 வயதுக்கு மேற்பட்டோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியானது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு சென்று சேர மத்திய அரசு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதன்படி கொரோனோ தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் சுவாரஸ்யமான வாசகத்துடன் பதிவிடுபவர்களுக்கு ரூ. 5000 பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

'மை கவர்மெண்ட்' என்கிற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடும்பத்தில் யாராவது தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டாலும் மத்திய அரசின் பரிசுத் தொகை அவர்களுக்கு கிடைக்கும்.

கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு நெட்டிசன்களிடையே பலத்த ஆதரவு எழுந்துள்ளது. அதனால் இந்த செய்தியை படிக்கும் நீங்கள் கொரோனா தடுப்பூசி போடவில்லை என்றால், உடனே செலுத்திக்கொண்டு மத்திய அரசின் பரிசுத் தொகையை பெற முயற்சி செய்யுங்கள்.

-பாலாஜி தங்கமாரியப்பன், சென்னை போரூர்.

Comments