முடிவடையாமல் வால்பாறை - முடீஸ் சாலை பணி! - இடையூறால் தவிக்கும் மக்கள்!!

     -MMH

     கோவை மாவட்டம் வால்பாறை முடீஸ் சாலையில் ஜல்லி போட்டதுடன் அப்படியே நிற்கின்றது. ஒரு மாதத்திற்கு மேலாகியும் வேலை இன்னும் தொடரவில்லை  இதனால் அரசு பேருந்து இருசக்கர வாகனங்கள் மூன்று சக்கர வாகனங்கள் செல்வதால் இடையூறு ஏற்பட்டுள்ளது. 

வாகனங்களின் டயரில் ஜல்லி கற்கள் பட்டு தெரிச்சு போய்  வழித்தடத்தில் பயணிப்போர் மீது விழுந்து படுகாயம் ஏற்படுகிறது இது போன்ற விபத்துக்கள்  தொடர்ந்து நடைபெறுவதால்  வால்பாறை நகராட்சி விரைவாக  முன்வந்து இந்த சாலையை சரி செய்து கொடுக்க வேண்டும் என்பது  முடீஸ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும்  சாலை ஓரங்களில் மாடு உள்ளிட்ட கால்நடைகள் இருக்கின்றன. இந்த வழித்தடத்தில் வாகனங்கள் செல்லும்போது சுற்றுச்சூழல் மாசுபட்டு கால்நடைகளுக்கு தீங்காக முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இதை கருத்தில் கொண்டு வால்பாறையில் இருந்து மூடீஸ் செல்லும் சாலையை விரைந்து முடித்து தர வேண்டுமென்பது வால்பாறை மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-செந்தில்குமார், மூடீஸ்.

Comments