மக்கள் மனதில் காவல்துறை ..!!

 

-MMH

      தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கும் நிலையில் தற்போது 2- ஆம் அலையில் மீண்டும் மாட்டி கொண்டு உள்ளனர் மக்கள்.இது ஒரு புறம் இருக்க. ஊரடங்கு நேரத்தில் உணவில்லாமல் தவிக்கும் மக்களுக்கு சமூக ஆர்வலர்களாக சகோதரனாக நண்பனாக தாயாக தந்தையாக உணவளித்தும்,மக்களுக்கு ஊக்கம் அளித்தும்,அறிவுரைகள் கூறி வரும் நம் காவல்துறை நண்பர்களுக்கு நாம் தலை வணக்கம் வேண்டும்.

இந்த 2 ஆம் அலை கொரோனா நேரத்தில் பசியை போக்க உணவில்லாமல் இருக்கும் தெருவோர வாசிகளுக்கு உணவழித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை தொடர்ந்து செய்து வரும் காவல்துறை நண்பர்களை நாம் நினைத்து பார்க்க வேண்டும்.

நோய்தொற்றை தடுக்க காவல்துறையின் அற்பணிப்பு எப்படி..?1.விழிப்புணர்வு நாடகங்கள் 2.ஓவியங்கள் வரைந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு 3.நடனமாடி விழிப்புணர்வு. ஒரு சில நேரங்களில் நாம் காவல் அதிகாரிகள் சந்திக்கும் போதும் சாலையில் வழி மரிக்கும் போதும் பயமும் கோபமும் கூட வரலாம் அது வேறு.

தற்போது இந்த கொரோனா நேரத்தில் மக்களோடு மக்களாக நின்று முன் கள பணியாளர்களாக தன் உயிரை கூட பெருதும் நினைக்காமல் மக்களுக்காக களத்தில்  நிற்கும் காவல்துறை எத்துணை பராட்டுகள் கொடுத்தாலும் போதாது. கொரோனா எனும் கொடிய நோய்தொற்றை தடுக்க காவல்துறைக்கு மக்களாகிய நாமும் ஒத்துழைப்பு கொடுப்போம்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-I. அனஸ். V.ஹரிகிருஷ்ணன்.

Comments

Anonymous said…
Kaval adhikarikaluku nandri elaikaluku unavu alipavarkaluku nandri
Alhamdulilah