சொந்த ஊர் திரும்பும் வடமாநில தொழிலாளர்கள்!!

     -MMH
      கோவை மாவட்டத்தில்  சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன வட மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் கோவை மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் வேலை செய்து வருகிறார்கள்.

கொரோனா 2-வது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. இதன் பரவலை தடுக்கும் விதமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இதனால் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள். இதன் காரணமாக கோவையில் இருந்து தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்லும் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று கோவை ரெயில் நிலையத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக பல மணி நேரம் காத்திருந்து சென்றனர்.

-அருண்குமார், கோவை மேற்கு.

Comments